1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (11:22 IST)

கொரோனாவில் இருந்து தப்பிக்க லாக் அவுட் ஒரு தீர்வா? WHO பதில்!!

லாக் அவுட் செய்வதால் மட்டும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிடுமா என WHO பதில் அளித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்தாலும் இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால், தற்போது படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. அடுவும் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது என்பது கூடுதல் தகவல். 
 
இந்நிலையில் மத்திய அரசு சில நகரங்களை முடக்க பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படி லாக் அவுட் செய்வதால் மட்டும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிடுமா என WHO பதில் அளித்துள்ளது. 
 
கொரோனா வைரஸில் இருந்து தப்புவதற்கு முழு அடைப்புகள் மட்டும் உதவாது. இது ஒரு தற்காலிக தீர்வு தான். வலிமையான சுகாதார தீர்வுகளை கொண்டுவர வேண்டும். லாக் அவுட் காலம் முடிந்துவிட்டால் மக்கள் மீண்டும் ஒன்று திரளும் போது நோய் வேகமாக பரவக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.