1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (10:53 IST)

என்ன செய்ய சொன்னா என்ன செஞ்சிருக்கீங்க? – பிரதமர் மோடி வேதனை!

இந்திய மக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்றவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னோட்டமாக ஒருநாள் மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்த ஊரடங்கில் நாள் முழுவதும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி இருந்தன.

ஆனால் மாலை நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அவ்வளவு நேரம் அமைதியாக வீட்டிற்குள் இருந்தவர்கள் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் பேர்வழி என வெளியேறி கூடி கும்மாளம் போட்டனர். மக்கள் கூடுதலை தவிர்ப்பதற்காகதான் இந்த ஊரடங்கே பிறப்பிக்கப்பட்டது என்பதை பலர் சரியாக உள்வாங்கி கொள்ளவில்லை.

இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி ”நிறைய மக்களுக்கு ஊரடங்கு குறித்த சரியான புரிதல் இல்லை. தயவு செய்து அரசின் பரிந்துரைகளை பின்பற்றி உங்களையும், உங்கள் குடும்பத்தையும் தற்காத்து கொள்ளுங்கள். தயவுசெய்து மாநில அரசுகளின் அறிவுரைகளை பின்பற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.