1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஜனவரி 2026 (14:52 IST)

இந்தமுறை குறி தப்பாது!.. அமெரிக்கா அதிபருக்கு ஈரான் அதிபர் வார்னிங்!...

donald
ஈரானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பண வீக்கம் காரணமாக அத்தியாயமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அதை எதிர்த்து ஈரான் மக்கள் கடந்த சில நாட்களாகவே சாலைகளில் இறங்கி போராட துவங்கிவிட்டனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஈரான் பாதுகாப்பு படையினர் களத்தில் இறங்கியுள்ளனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் எழுந்தது. இந்த கலவரத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்ததாக சொல்லப்படுகிறது.

ஒருபக்கம் ஈரானில் போராடும் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியிருக்கிறது.
ஈரானின் அதிகார அமைப்புகளை கைப்பற்றுங்கள்.. உங்களை தாக்குபவர்கள் பெயர்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. உங்களுக்கான உதவி வந்து கொண்டே இருக்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஒருபக்கம், ஈரானில் அமெரிக்க படைகளும் குவிக்கப்பட்டது.

எனவே ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் மூலுமா என்கிற அச்சம் உலக நாடுகள் இடையே ஏற்பட்டது. இந்நிலையில் 024ஆம் வருடம் நடத்தப்பட்ட தாக்குதலில் டிரம்பின் காது பகுதியில் துப்பாக்கி கொண்ட உரசி சென்ற புகைப்படத்தை பகிர்ந்து ‘இந்த முறை குறி தப்பாது’ என ஈரான் அதிபர் பதிவிட்டிருக்கிறார்.

போராட்டக்காரர்கள் மீது ஈரன் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராம் அதிபர் டிரம்ப் மிரட்டல் துணியில் பேசி வரும் நிலையில் பதிலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்திருக்கிறது.