1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Iran bans english teaching in schools

பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க தடை; ஈரான் அரசு அதிரடி

ஈரான்
மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்குவதை தடுக்கும் விதமாக ஈரானில் தொடக்கநிலைப் பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ஈரான் நாட்டின் பள்ளிகளில் தற்போது ஆங்கிலம் மொழி கற்றுத்தரப்படுகிறது. இந்த நிலையில் தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதற்கான உத்தரவை ஈரான் உயர்நிலைக் கவுன்சில் பிறப்பித்துள்ளது. தொடக்கப் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதால் குழந்தைகள் மேற்கத்திய கலாசாரத்தையே பின்பற்றுகின்றனர். 

இதனால் ஈரானிய கலாசாரம் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே ஈரானிய கலாசாரத்தை குழந்தைகளிடம் வளர்க்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளியில் படிக்கும் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ - மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்றுத்தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
பாபா ராம்தேவின் அடுத்த இலக்கு: சிக்கிய அமேசான், ப்ளிப்கார்ட்...