1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Girl Student Giving Birth While Writing Exam

தேர்வு எழுதும் போது குழந்தை பெற்றெடுத்த பள்ளி மாணவி!

மாணவி
மாணவி ஒருவர் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் சவுதி அரேபியா நாட்டில் நடந்துள்ளது.
 
மேற்கு சவுதி அரேபியாவில் வசித்து வரும் மாணவி ஒருவர் பகுதி நேர படிப்பு படித்து வருகிறார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது அவருக்கு செமெஸ்டர் தேர்வு வந்துள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக அந்த மாணவி தேர்வு எழுத அங்குள்ள உயர்நிலை பள்ளிக்கு சென்றுள்ளார்.
 
ஆனால் தேர்வு எழுதிக்கொண்டு இருக்கும்போதே மாணவிக்கு பிரசவ வலி வந்துள்ளது. இதனால் அந்த மாணவி வலியால் துடித்துள்ளார். பள்ளி நிர்வாகம் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.
 
ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னர் பள்ளி ஊழியர்கள் இருவரின் உதவியுடன் அந்த மாணவி பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். அதன் பின்னர் தாயும், சேயும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அடுத்த கட்டுரையில்
ரூ.500க்கு விற்கப்படும் ஆதார் தகவல்கள்; அதிர்ச்சி ரிப்போர்ட்