திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (12:00 IST)

ஆட்டுகெல்லாம் வேலை கிடைக்குது கூகுள்ல…!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகத் தோட்டத்தில் 3500 ஆடுகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.


இன்றைய இணைய உலகில் கூகுள் பற்றி தெரியாமல் யாரும் இருக்க முடியாது. இணைய தேடுபொறி நிறுவனங்கள் பல இருந்தாலும், கூகுள் மட்டுமே இணையத்தில் பல மடங்கு ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனம் தனது புல்வெளிகளை சுத்தமாக வைத்திருக்க 3,500 ஆடுகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது. புல்வெளி சீராக இருக்க இந்த ஆடுகளை மேய்க்க முடிவு செய்தனர்.

ஆம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தனது ஏக்கர் தோட்டங்களில் புல்வெளிகளை பராமரிக்க கூகுள் சுமார் 3,500 ஆடுகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது. புல்வெளிகளை சரிசெய்ய பெட்ரோல், டீசல் இயந்திரங்களை பயன்படுத்தி இயற்கை சூழலை காப்பாற்ற கூகுள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கூகுளின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.