1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Indonesia heavy earthquake register today

இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்! மக்கள் அதிர்ச்சி!

World
இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில் ஆண்டுதோறும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. எரிமலைகள் அதிகம் உள்ள இந்தோனேசிய தீவுகளில் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் இன்று காலை 5.17 மணியளவில் இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே 259 கிமீ. மையப்பகுதியிலிருந்து பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும்  விடுக்கப்படவில்லை.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசி போடாவிட்டால் வெளியே வர அனுமதியில்லை! – புதுச்சேரி அரசு அதிரடி!