1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (19:31 IST)

உங்கள் அன்பினால் மட்டுமே நான்! புதிய ப்ரமோ வெளியிட்ட கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலாசன் சமீபத்தில் அமெரிக்கப் பயணம் முடிந்து இந்திய திரும்பியபோது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து  வீடு திரும்பினார்.

இந்நிலையில், பிக்பாஸ் -5 சீசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன்கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இன்று அடுத்த புதிய ப்ரமோ வீடியொவில் உங்கள் அன்பினால் மட்டுமே மீண்ட நான் என உருக்கமாகப் பேசியுள்ளார்.