1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Indian staff case filed to alibaba,

அலிபாபா நிறுவன தலைவர் மீது இந்திய ஊழியர் வழக்கு:

சீனா
தன்னை தவறாக வேலையை விட்டு நீக்கி விட்டதாக சீன ஆன்லைன் நிறுவனமான அலிபாபா நிறுவனம் மீது இந்திய ஊழியர் பதிவு செய்துள்ள வழக்கால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அலிபாபா நிறுவன தலைவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது
 
சமீபத்தில் சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சீனாவின் முக்கிய செயலிகளில் ஒன்றான அலிபாபாவின் யூசி நியூஸ் சேனல்களில் செய்திகள் சென்சார் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியரான புஷ்பாந்திர சிங் என்பவரை  திடீரென வேலையில் இருந்து அலிபாபா நிறுவனம் நீக்கியது 
 
இந்த நிலையில் தன்னை தவறாக வேலையிலிருந்து நீக்கியதாக புஷ்பாந்திர சிங் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் இந்த வழக்கில் சுமார் 20 கோடியே 36 லட்சம் ரூபாய் அவர் இழப்பீடு கேட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
பிரதமருக்கு நன்றி சொன்ன நாமக்கல் மாணவியின் குடும்பத்தினர்!