வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2020 (08:27 IST)

இந்தியாவை மீட்ட கார்கில் வீரர்களுக்கு வீர வணக்கம்! – ராஜ்நாத் சிங் மரியாதை!

கார்கில் போர் முடிந்து 21 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் இன்று அதன் நினைவு நாளில் அமைச்சர் ராஜ்நாத் சிங் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லைக்குட்பட்ட கார்கில் பகுதியை ஆக்கிரமித்ததால் 1999ல் இருநாடுகளுக்கிடையே போர் மூண்டது. இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற கார்கில் யுத்தத்தில் இந்தியா வெற்றிப்பெற்றதை தொடர்ந்து போர் முடிந்தது. போரில் இந்தியா வென்ற ஜூலை 26ம் தேதி கார்கில் நினைவு தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்று 21வது கார்கில் போர் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்தியாவை காக்க எல்லையில் உயிர்நீத்த மற்றும் உயிரை பொருட்படுத்தாது போராடிய ராணுவ வீரர்களுக்கும், அவர்தம் குடும்பங்களும் தனது மரியாதையை செலுத்தியுள்ளார். நாட்டிற்காக சுதந்திர உணர்வோடும், நாட்டு பற்றோடும் எல்லையில் உயிர் தியாகம் செய்து நாட்டை காப்பாற்றி வரும் அனைத்து வீரர்களுக்கும் தனது மரியாதையை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.