திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 டிசம்பர் 2017 (11:22 IST)

அமெரிக்க சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய விளையாட்டு வீரர்

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த தன்வீர் உசேன் என்ற பனிச்சறுக்கு விளையாட்டு வீரர், அமெரிக்காவில் 12 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் நடைபெற்ற உலக பனி ஷூ விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் தன்வீர் உசேன்  சென்றார். அப்போது அவர் 12 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். புகாரின்பேரில் அவர் மார்ச் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையின்போது அவர்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். செய்த தப்பை ஒப்புக்கொண்டதால் தன்வீர் உசேன் தண்டிக்கப்படாமல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.