1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (15:45 IST)

மெட்ரோ ஸ்டேஷனில் பெண் பத்திரிக்கையாளருக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி வீடியோ

டெல்லியில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில், பட்டப்பகலில் இளம் பெண் பத்திரிக்கையாளருக்கு, ஒரு நபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக டெல்லி மாறி வருகிறது.  நிர்பயா தொடங்கி பல இளம்பெண்கள் டெல்லியில் தொடர்ந்து பாலியல் பாலியத்காரத்திற்கு ஆளாகி வருவது அங்கு தொடர் கதையாகி வருகிறது.
 
இந்நிலையில், கடந்த 13ம் தேதி டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதையில் உள்ள படிக்கெட்டில் ஒரு பெண் பத்திரிக்கையாளர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்னே சென்று கொண்டிருந்த நபர் திடீரெனெ அப்பெண்ணின் அந்தரங்க உறுப்புகளின் மீது கை வைத்து பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கினார்.
 
இதனால் அப்பெண் அதிர்ச்சியடைந்தாலும், சுதாரித்துக்கொண்டு அந்த நபரின் கையை பிடித்து அவரை தாக்கினார். விட்டால் போதும் என அந்த நபர் ஓட அப்பெண் அவரின் பின்னாலேயே துரத்திக்கொண்டு செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
 
இதையடுத்து, அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, சிசிடிவி கேமரா பதிவை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.