செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2017 (15:26 IST)

பாலியல் பலாத்காரம் செய்த 4 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு...

தன்னுடன் படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் 4 வயது சிறுவன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
மேற்கு டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவன், தன்னுடைன் படிக்கும் சிறுமிக்கை தனது விரல்கள் மற்றும் கூர்மையான பென்சிலை பயன்படுத்தி பாலியல் ரீதியாக தாக்கியதாகவும், சிறுமியின் உறுப்பு காயம் அடைந்ததாகவும் சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
அதன் அடிப்படையில் அந்த சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், அவன் சிறுவன் என்பதால், சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி குழந்தைகள் பாதுகாப்பு கீழ் கற்பழிப்பு வழக்கு சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இது மிகவும் உணர்ச்சிகரமான வழக்கு என்பதால், நாங்கள் ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை எடுப்போம் என போலீஸ் தலைமை செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.