1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. India warn to return in Ukaraine Indians

உக்ரைனிலிருந்து சீக்கிரம் வெளியேறுங்கள்! – இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!

India
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்தியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை திரட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் பணிபுரியும் இந்தியர்கள் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் உக்ரைனில் தங்கி படித்து வரும் இந்திய மாணவர்களையும் நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick