வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

கிரிப்டோ கரன்ஸி என்பது மக்களை ஏமாற்றும் மோசடி திட்டம்: ரிசர்வ் வங்கி ஆளுனர்

இந்தியாவில் கிரிப்டோகரன்சி இன்னும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாத நிலையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சி மூலம் வரும் வருமானத்திற்கு 30% வரை என அறிவிக்கப்பட்டது
 
இருப்பினும் வரி பெறுவதால் அது சட்டபூர்வமாகாது என்றும் இந்தியாவில் இன்னும் கிரிப்டோகரன்சி சட்டபூர்வமாக்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் கிரிப்டோகரன்சியை தடை செய்வதே இந்தியாவுக்கு நல்லது என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரவிசங்கர் கூறியுள்ளார். கிரிப்டோகரன்சி என்பது மக்களை ஏமாற்றி மோசடி திட்டம் என்றும் இந்த திட்டத்தை கண்டிப்பாக இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஒரு பக்கம் மத்திய அரசு கிரிப்டோகரன்சிக்கு வரி அறிவித்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் ரிசர்வ் வங்கி ஆளுநர் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது