வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (14:16 IST)

பாஜக ஆட்சியில் இருக்கும் வரை பாகிஸ்தான்-இந்தியா நல்லுறவு ஏற்படாது: இம்ரான்கான்

Imrankhan
இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பில்லை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவில் பாஜக அரசாங்கம் மிகவும் கடுமையானது. இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லுறவை நாங்கள் விரும்பினாலும் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பு இல்லை
 
தேசியவாத உணர்வுகளை தூண்டி விடுவதால் இரு நாட்டிற்கும் இடையே உள்ள பிரச்சனைகளை தீர்வு காண வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார் 
 
நான் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் ஆப்கானிஸ்தான் ஈரான் சீனா அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்வேன் என்று கூறினார்
 
Edited by Mahendran