செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified செவ்வாய், 22 நவம்பர் 2022 (13:01 IST)

டாஸ் வென்ற நியூசிலாந்து எடுத்த அதிரடி முடிவு!

newzeland wickets
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது என்பதும் இதனை அடுத்து தற்போது அந்த அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நியூசிலாந்து அணி சற்றுமுன் வரை 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்தின் முதல் விக்கெட்டை இந்திய பவுலர் அர்ஷ்தீப் சிங் எடுத்து உள்ளார் என்பதும் ஃபின் அலென் 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் 2-0  கணக்கில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த நாட்டில் வைத்தே ஒயிட்வாஷ் செய்துவிடும் சாதனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran