புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (11:17 IST)

கொரோனாவை தெரிந்தே பரப்பியிருந்தால் ….சீனாவுக்கு டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை !

சீனாவில் ஆய்வுக்கூடத்தில் மனிதனால் கொரொனா வைரஸ் பரப்பியிருந்தால், சீனா கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸால் பல்வேறு உலகநாடுகள் இதனால் பொருளாதார இழப்புகளையும், மனித இழப்புகளையும் சந்தித்து வருகின்றது.

இந்நிலையில், சீனாவில் வுஹான் ஆய்வுக்கூடத்தில் மனிதனால்தான் கொரோனா வைரஸ் தொற்று  உற்பத்தி செய்யப்பட்டது என நோபல் பரிசு வென்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் மோந்தக்னேர் கூறியிருந்தார்.

மேலும், எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும்போது,இந்த  கொரோனா கிருமி மனிதனால் செயற்கையாகப் படைக்கப்பட்டுள்ளது என ஒரு பிரெஞ்சு அறிஞர் கூறியுள்ளார்.

இந்நிலையில், சீனா கொரோனா வைரஸை தெரிந்தே பரப்பி இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

கொரோனாவை தெரிந்தே பரப்பியிருந்தால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்; கொரோனா பரவும் முன்பே அதை சீனா தடுத்து நிறுத்தி இருக்கலாம், ஆனால் அதை செய்யவில்லை - அதிபர் டொனால்ட் ட்ரம்ப்