ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (08:58 IST)

அமெரிக்கா எல்லையை மேலும் ஒரு மாதத்திற்கு மூடிய கனடா: அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்கா எல்லையை மேலும் ஒரு மாதத்திற்கு மூடிய கனடா
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வந்த போதிலும் அமெரிக்காவில் இந்த வைரசினால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகிலேயே கொரோனாவால் அதிகமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமெரிக்காவின் அண்டை நாடாக இருந்தபோதிலும் கனடாவில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இல்லை.  கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,383 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,470 ஆகவும் உள்ளது என்பதும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் கனடாவில் கொரோனா பெருமளவு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான எல்லையை சமீபத்தில் மூடிய கனடா, தற்போது மேலும் ஒரு மாதத்திற்கு எல்லையை மூடி வைக்க உத்தரவிட்டு இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து வரும் அமெரிக்கர்களால் கனடா நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கையை கனடா அரசு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கனடா அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலமும் மக்களின் பூரண ஒத்துழைப்பின் மூலமும் கொரோனா வைரஸ் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது