புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (08:51 IST)

மதுரையில் நடிகர் சசிகுமார் செய்த வேலையை பாருங்க!

மதுரையில் நடிகர் சசிகுமார் செய்த வேலையை பாருங்க!
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை திரைப்படத்தை படப்பிடிப்பு முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகர் நடிகைகள் பலர் வேடிக்கையான வினோதமான ஒரு சில சீரியஸான வீடியோக்களை வெளியிட்டு பொழுதைப் போக்கி வருகின்றனர். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் இந்த கொரோனா விடுமுறையிலும் ஒரு உருப்படியான வேலையை நடிகரும் இயக்குனருமான சசிகுமார் செய்துள்ளார். மதுரையில் அவர் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த போதிலும் வீட்டை விட்டு வெளியே வந்து வந்து கொண்டிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் 
 
நாம் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே போலீஸ்காரர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பணி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்காக நாம் வீட்டிலிருந்து உதவி செய்ய வேண்டும் என்றும் சசிகுமார் மைக்கில் பேசி இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் வந்து கொண்டிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது