திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 16 மே 2019 (21:27 IST)

ஒரே ஊசி பலருக்கு செலுத்தியதால் ஹெச்.ஐ.வி நோய்தொற்று! அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான் மாநிலம் சிந்தி மாகாணத்தில் உள்ள வஸாயே என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் பலர் ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
அதாவது தவறான உபகரங்களை, அல்லது பயன்படுத்திய உபக்கரங்களை, ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்தியதுதான் இதற்குக் காரணம் என்று  சிந்து மாகாண எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட செயல் திட்ட மேலாளர் கூறியுள்ளார்.
 
மேலும் மருத்துவர்கள் பணத்தைச் சம்பாதிப்பதற்காகவே இம்மாதிரி செயல்களில் ஈடுபட்டதால்தான் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் ஹெச்.ஐ.வி. நோய்த் தொற்று ஏற்படக் காரணம் என்று ,  தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
உலக அளவில் ஹெச்.ஐ.வி. வேகமாகப்பரவிவரும் நாடுகளில் பாகிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் ஐநா சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.