கேஎஃப்சி சிக்கன் ஒரு வருஷம் ஃபுல்லா ஓசியில்... வைரலாகும் டிவிட்!

Last Updated: புதன், 15 மே 2019 (16:56 IST)
மாணவன் ஒருவர் ஒரு வருடமாக கேஎஃப்சி ஊழியர்களை ஏமாற்றி ஓசியில் சிக்கன் சாப்பிட்டதாக செய்திகல் வெளியாகியுள்ளது. 
 
கேஎஃப்சி உலகம் முழுவது பல கிளைகளை வைத்துள்ளது. அப்படி தென்னாப்பிரிக்காவில் உள்ள கேஎஃப்சில் கிளைகளுக்கு சென்று மாணவன் ஒருவன் உணவு தரத்தை ஆய்வு செய்ய கேஎஃப்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி உணவுகளை ஓசியில் சாப்பிட்டு வந்திருந்தாராம். 
 
உணவகத்துக்குள் நுழைந்தவுடன் நேரே உணவு தயாரிக்கும் இடத்துக்கு சென்று உணவுகளை பற்றி குறிப்பெடுத்துக்கொள்வது, ஊழியர்களை கேள்வி கேட்பது என நடந்துக்கொண்டதால், அங்கு பணி புரியும் ஊழியர்களும் அவர் அதிகாரி என்றே நினைத்து உணவு வழங்கினர் என செய்தி வெளியானது. 
 
ஆனால், இந்த செய்தியை இந்த செய்தி ஒரு வதந்தி என தென்னாப்பிரிக்க கேஎஃப்சி நிறுவனம் மறுத்தது. அதோடு இது எங்களுக்கு சிறந்த விளம்பரம் எனவும் குறிப்பிட்டுள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :