திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2017 (15:56 IST)

கண்ட இடங்களில் கை வைத்தார்; நடிகைகள் புகார் ; நடிகருக்கு சிக்கல்

ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக் மீது ஹாலிவுட் நடிகைகள் பலரும் புகார் கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான ஹார்வே வெயின்ஸ்டின் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனால், அவரை பலரும் ஒதுக்க தொடங்கியுள்ளனர். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 லிருந்து 25 வருடங்கள் வரை ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
 
இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக் மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மார்பில் அவர் கை வைத்தார் என பிரபல நடிகை ஹிலாரி பர்டன் தற்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 


 

 
அவரைத் தொடர்ந்து, அவரிடம் பென் அஃப்லெக் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில், ஹாலிவுட் படங்களில் மேக்கப் கலைஞராக பணிபுரியும் அன்னாமேரி டெண்ட்லர் என்பவரும் அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.


 

 
2014ம் ஆண்டு நடந்த ஒரு பார்ட்டியில் பென் என்னுடைய பின்புறத்தில் கையை வைத்து அழுத்தினார். அதற்கான அவர் என்னிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார். மேலும், பல பெண்களை போல், அந்த சூழ்நிலையில் நான் எதுவும் கூறவில்லை. ஆனால், அவரை நேரில் பார்த்தால் அவரிடம் நிறைய கேட்க வேண்டும் என தான் நினைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
ஹாலிவுட் பெண் கலைஞர்களின் தொடர் பாலியல் புகார் நடிகர் பென் அஃப்லெக்கிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.