லஞ்சம் வாங்குபவர்களுக்கு செருப்படி: தெலங்கானா முதல்வர் சர்ச்சை...


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 9 அக்டோபர் 2017 (20:15 IST)
லஞ்சம் வாங்குபவர்களை செருப்பால் அடியுங்கள் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். இந்த கருத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 
 
சமீபத்தில் தெலங்கானாவின் நடைபெற்ற எஸ்சிசிஎல் அமைப்பின் தேர்தலில் ராஷ்டிய சமிதி கட்சி வெற்றி பெற்றது. இந்த நிகழ்வில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார்.
 
அங்கு அவர் பேசியதாவது, எஸ்சிசிஎல்-ல் லஞ்சத்தை அனுமதிக்காதீர்கள். ஒருவேளை எந்த அதிகாரியாவது அடிப்படை தொழிலாளர் பயன்களை பெற லஞ்சம் கேட்டால் அவர்களை செருப்பால் அடியுங்கள் என்று கூறினார். 
 
எஸ்சிசிஎல் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்தால் அதற்கான கல்வி செலவை மாநில அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.
 
முதல்வரின் இந்த பேச்சை கேட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அதிகாரிகள் மத்தியில் இது சிறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :