கேரளாவுல ‘மெர்சல்’ ரிலீஸ் ஆகாதா?


Cauveri Manickam (Suga)| Last Modified செவ்வாய், 10 அக்டோபர் 2017 (13:56 IST)
கேரளாவில் விஜய்யின் ‘மெர்சல்’ ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

 
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
 
வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகிறது. அன்றைய தினமே மலையாளம் மற்றும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. கேரளாவில் இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத சிறப்பாக, 350 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ‘பாகுபலி’ படத்தை வெளியிட்ட குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம்தான் இந்தப் படத்தையும் வெளியிடுகிறது.
 
ஆனால், அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான ‘பைரவா’ படம், கேரளாவில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. அதில், விநியோகஸ்தர்களுக்கு ஏகப்பட்ட நஷ்டமாம். எனவே, அந்த நஷ்டத்தை ஈடுகட்டினால்தான் ‘மெர்சல்’ படத்தை வாங்குவோம் என குரல் எழுப்பியிருக்கின்றனர் கேரள விநியோகஸ்தர்கள்.


இதில் மேலும் படிக்கவும் :