இலங்கை அதிபராகிறார் ராஜபக்ஷே..
இலங்கை அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச
இலங்கை அதிபர் தேர்த்லின் வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருந்த வேளையில் பொதுஜன முன்னணி கட்சியின் வேட்பாளர் கோத்தப்பய ராஜபக்ஷே, தன்னை எதிர்த்து போட்டியிட்ட புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட 37,000 க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் சஜித். மேலும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதன் மூலம் கோத்தப்பய ராஜபக்ஷே இலங்கையின் அதிபராகிறார். மேலும் தனது வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறு தனது கட்சி தொண்டர்களுக்கு கோத்தப்பய ராஜபக்ஷே அறிவுறுத்தியுள்ளார்.
வெற்றிக்கு 50% வாக்குகள் இருந்த பெற வேண்டும் என இருந்த நிலையில், கோத்தப்பய ராஜபக்ஷே 50% வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.