இலங்கை வாக்குப்பதிவு நிறைவு..

Arun Prasath| Last Modified சனி, 16 நவம்பர் 2019 (20:32 IST)
இலங்கையில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

இலங்கையில் 12,845 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிபர் தேர்தலில் 35 பேர் போட்டியிட்ட நிலையில், கோத்தபய ராஜபக்‌ஷே, சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு கடும் போட்டி நிலவுகிறது.

மாலை ஐந்து மணி அளவில், வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 69 இடங்களில் வன்முறை நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 81.52 வாக்குகள் பதிவாகியுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :