1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 28 பிப்ரவரி 2022 (07:19 IST)

உக்ரைன்-ரஷ்யா போர்: இன்று ஐ.நா பொதுச்சபையின் அவசரக்கூட்டம்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 5 நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஐநா சபையின் அவசர கூட்டம் கூட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போது தாக்குதல் தொடர்பாக விவாதம் செய்ய ஐநா சபையின் அவசர கூட்டம் இன்று நடைபெற உள்ளது 
 
உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக ஐநா சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது