1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By siva
Last Updated : திங்கள், 28 பிப்ரவரி 2022 (07:15 IST)

5வது நாளாக உக்ரைன் நகரங்களை சுற்றி வளைக்கும் ரஷ்யா: வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 4 நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்று 5வது நாளாகவும் உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைத்து ரஷ்யா ஆக்கிரமித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதத் தடுப்பு படையினரையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தாக்குதல் நடத்தியும் உலக நாடுகள் வெறும் கண்டனங்களை தெரிவித்து இந்த தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது