1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 மார்ச் 2018 (21:23 IST)

கூகுள், ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து சராஹா நீக்கம்...

சராஹா ஆப் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரலானது. இதன் மூலம் முகம் தெரியாவதவர்களிடம் இருந்து பரிந்துரை மற்றும் கமெண்ட்களை பெற முடியும். 
 
மேலும், மற்றவர்கள் தரும் கருத்துக்களை கொண்டு ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ளலாம் என்பது இந்த செயலியை உருவாக்கியவர்களின் கருத்து. சராஹாவில் மற்றவர்களின் ப்ரோஃபைல்களை பார்த்து, அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். 
 
ஆனால், மெசேஜ் பெற்றவர்கள் அனுப்பும் மெசேஜை மட்டிமே பார்க்க முடியும், அதை யார் அனுப்பியது என்ற தகவல் தெரியாது. இதில் மெசேஜ்களை பிளாக் செய்ய முடியும். ஆனால், தனி நபர் பாதுகாப்பு அம்சங்கள் சற்று கேள்விகுறியாவே இருந்தது. 
 
இந்நிலையில், இந்த ஆப் அதிக தொந்தரவு அளிப்பதாக பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் இது குறித்து Change.org என்ற வலைதளத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். 
 
அதில், கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இந்த சராஹா செயலியை நீக்கக் கோரியிருந்தார். சராஹா ஆப் மிகவும் தொந்தரவு அளிப்பதை ஒப்புக்கொண்ட 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் இதற்கு ஆதரவு அளித்தனர். இதனால் இந்த ஆப் நீக்கப்பட்டுள்ளது.