சிரியா போர் குறித்து உலகளவில் அதிகம் தேடிய தமிழர்கள்!
சிரியா போர் குறித்து கூகுளில் உலகளவில் தமிழகத்தை சேர்ந்தவர் அதிக அளவில் தேடியுள்ளனர்.
சிரியாவில் நடக்கும் போர் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கி பலரும் பகிர்ந்து வருகின்றனர். போர் துயரங்கள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சியளிக்கு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உலகளவில் கூகுளில் சிரியா போர் குறித்த தேடியவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ஆவடி முதலிடம் பிடித்துள்ளது. முதல் 50 இடங்களில் தஞ்சாவூர், மதுரை, நாகர் கோவில் உள்ளிட்ட தமிழக பகுதிகள்தான் இடம்பிடித்துள்ளது. ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மிக குறைவாகவே தேடப்பட்டுள்ளது. இந்தியாவை கடந்து மற்ற நாடுகள் எல்லாமே 30வது இடத்திற்கு அடுத்துதான் உள்ளது.