ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2022 (21:00 IST)

பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் கைவிடப்பட்டதா? அமைச்சர் அன்பில்மகேஷ் தகவல்

anbil
கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்த நிலையில் திமுக ஆட்சி வந்தபிறகு லேப்டாப் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது
 
இதனை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின
 
இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும் 11 லட்சம் லேப்டாப் வழங்க வேண்டிய நிலை உள்ளதால் அதற்கான நிதி ஒதுக்குவது குறித்த பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்