தொடர்புடைய செய்திகள்
- தளபதி 65 படத்தின் கதை சிம்புவுக்காக எழுதியதா? கொளுத்திப் போட்ட நெட்டிசன்ஸ்!
- 47 நாளில் ரீமேக் படத்தை முடித்த படக்குழு – தமிழில் அட்ரஸ்ஸே காணோம்!
- சுந்தர் சிக்கு வில்லனாக நடிக்கும் ஜெய் – என்ன கொடும சார் இது!
- விஜய் ஆண்டனி வெளியிட்ட ரீமிக்ஸ் பாடல் - இணையத்தில் வைரல்!
- திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணையும் இயக்குனர் – எம் எல் ஏ சீட்டும் உண்டாம்!
பிரான்ஸ் அதிபருக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தகவல்!
பிரான்ஸ் அதிபருக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தகவல்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 7 கோடிக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
இந்த நிலையில் ஒரு சில நாடுகளின் பிரதமர் மற்றும் அதிபர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் தற்போது பிரான்ஸ் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அவர்களுக்கு கொரோனா சற்றுமுன் உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர் ஏழு நாட்கள் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு அதிபர் அலுவலக பணிகளை கவனிப்பார் என்று அதிபர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
பிரான்ஸ் நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு அதிபர் இமானுவேல் அறிவுறுத்தியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் ஏற்கனவே 24 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
