வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (07:58 IST)

எகிப்து முன்னாள் அதிபர் நீதிமன்ற விசாரணையின்போது மரணம்: கொலை செய்யப்பட்டாரா?

முன்னாள் எகிப்து நாட்டின் அதிபர் முகமது மோர்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நீதிமன்ற விசாரணையின்போது திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
 
எகிப்து நாட்டின் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானவர் முகமது மோர்சி. ஆனால் அவரை கடந்த 2013ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து இறக்கிய எகிப்து ராணுவம், அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தியது. இதுகுறித்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் முகமது மோர்சி மீது சுமத்தப்பட்ட இன்னொரு வழக்கின் விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென நீதிமன்றத்தில் அவர் மயங்கி விழுந்தார் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக கூறினர்
 
முகமது மோர்சி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினாலும், அவரது ஆதரவாளர்கள் ராணுவ அரசு அவரை கொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது