உதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய விமானம்
தென்னாப்பிரிக்காவில் 20 பதின்வயது மாணவர்கள் உருவாக்கிய விமானம் தனது முதல் பயணத்தின் முதல் நிறுத்தத்தை அடைந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து எகிப்தின் கெய்ரோ நகரம் வரையிலான சுமார் 12,000 கிலோமீட்டர் தொலைவை அடைய ஆறு வாரங்கள் ஆகும்.
ஆயிரக்கணக்கான விமானம் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களை இணைத்து 20 பதின்வயது மாணவர்கள் நான்கு பேர் அமரக்கூடிய ஸ்லிங்-4 விமானத்தை கட்டமைத்தனர்.
நீங்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்று ஆப்பிரிக்காவுக்கு உணர்த்தவே இந்த முயற்சி என்று இதன் 17 வயது பெண் விமானி மேகன் வெர்னர் கூறியுள்ளார்.
நாங்கள் செய்ததை என்னால் நம்ப இயலவில்லை. இந்த விமானம் என் குழந்தையை போன்றது என்கிறார் இதை உருவாக்கிய குழுவில் இருந்த 15 வயது மாணவி ஆக்நஸ் சீமெலா.