செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (10:29 IST)

திமுகவில் அடுத்தடுத்த மரணங்கள்: கலக்கத்தில் கட்சியினர்

திமுக விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ மற்றும் அரியலூர் திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் இன்று மரணமைடைந்துள்ளது கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார் என செய்தி வெளியான நிலையில் அடுத்து அரியலூர் திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் மறைவு செய்தியும் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
அதேபோல், அரியலூர் திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியனும் உடல் நலக்குறைவால் காலமானார். மறைந்த சிவசுப்பிரமணியன் உடல் ஆண்டிமடத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.