வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (13:47 IST)

கேரளாவுக்கு நிபா, பீகாருக்கு மூளைக்காய்ச்சல் – 2 நாட்களில் 36 குழந்தைகள் மரணம்

பீகார் மாநிலத்தில் வேகமாக பரவிவரும் மூளைக்காய்ச்சலால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குழந்தைகள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பீஹார் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக வடக்கு பீகார் மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை பரிசோதித்தபோது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு மிகவும் குறைவாக இருந்துள்ளது. Acute Encephalitis Syndrome (AES) எனப்படும் இந்த குறைப்பாடானது பீகாரில் உள்ள அதிகமான குழந்தைகளுக்கு உள்ளது. இந்த பாதிப்பினால் கடந்த 48 மணி நேரத்தில் 36க்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவ சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மேலும் 100க்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேராளாவில் நிபா வைரஸ் பரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை போல பீகாரில் இந்த மூளைகாய்ச்சல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பீகார் அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.