தொடர்புடைய செய்திகள்
- பறக்கும் தட்டுகள் குறித்து வெளிவரும் ரகசியங்கள்! – அமெரிக்காவில் நடைபெறும் வழக்கு!
- லிங்குசாமி இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போகும் பேன் இந்தியா ஹீரோ!
- வறண்டு வரும் ஏரியில் மனித உடல்கள்..! – அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!
- திடீரென உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் மனைவி! – உலக அரசியலில் பரபரப்பு!
- பன்றி இதயம் பொருத்தப்பட்டவருக்கு புதிய வைரஸ் தொற்று! – அமெரிக்காவில் அதிர்ச்சி!
வானத்திலிருந்து வந்து காரில் மோதிய விமானம்! – அமெரிக்காவில் கோர விபத்து!
அமெரிக்காவில் பழுதடைந்த விமானம் ஒன்று மேம்பாலத்தில் தரையிறங்க முயன்று காரில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள புரோவர்ட் நகர விமான நிலையத்தில் இருந்து ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று விமானி மற்றும் 2 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.
விமானம் மியாமி நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட பழுதால் அவசரமாக தரையிறக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது. இதனால் அங்குள்ள மேம்பாலம் ஒன்றில் தரையிறக்க விமானி முயன்றுள்ளார். அப்போது மேம்பாலத்தில் சென்ற கார் மீது மோதிய விமானம் தீப்பற்றியது.
இதில் விமானத்தில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே தீப்பற்றி உயிரிழந்துள்ளார். விமானத்தில் பயணித்த இருவர் மற்றும் காரில் சென்ற 2 குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
