வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 5 செப்டம்பர் 2022 (17:47 IST)

ஜெர்மனி விமானம் கடலில் விழுந்து விபத்து.. 4 பேர் உயிரிழப்பு.

Flight
ஜெர்மனியைச் சேர்ந்த சிறிய ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
 
ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 என்ற ஜெட் விமானம் ஒன்று ஸ்பெயின் மற்றும் கொலோன் இடையே பறந்து கொண்டிருந்தது
 
அப்போது திடீரென விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமான பைலட்டுகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டது 
 
இதையடுத்து அந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்கள் படகுகள் மூலம் தேடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன