ரயில் முன் வீடியோ எடுக்க முயற்சி! இளைஞரை தூக்கி வீசிய ரயில்! – வைரலாகும் வீடியோ!
தெலுங்கானாவில் ஓடும் ரயில் அருகே வீடியோ எடுக்க முயன்ற இளைஞர் ரயிலில் இடித்து வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இளைஞர்களிடையே ரீல்ஸ் மோகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தங்களது ரீல்ஸ் அதிகம் லைக்குகள் பெற வேண்டும் என்பதற்காக சிலர் ஆபத்தான வகையில் மலைச்சரிவுகளில், வெள்ளத்தில் ரீல்ஸ் செய்வது ஆபத்திலும் முடிந்து விடுவதாக உள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்த அக்ஷய் ராஜ் என்ற 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் ரயில் செல்லும் பாதையில் ரீல்ஸ் செய்ய முயற்சித்துள்ளார். ரயில் வரும் நேரத்தில் அதன் அருகே நடந்து வந்தபோது ரயிலின் எஞ்சின் அவரது பக்கவாட்டில் மோதி தூக்கி வீசியது.
இதனால் இளைஞர் அக்ஷய் ராஜ் எலும்பு முறிந்து கீழே விழும் காட்சிகள் காண்போரை கலங்க செய்துள்ளது. அப்பக்கமாக சென்ற ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் அதேசமயம் முகத்தில் சேதமும், பல இடங்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.