தொடர்புடைய செய்திகள்
- ஃபேஸ்புக் பதிவால் கலவரம்: இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு
- 1984 சீக்கியக் கலவரம் பற்றி சர்ச்சைப் பேச்சு – கட்சி பொறுப்பாளரை மன்னிப்புக் கேட்க வைத்த ராகுல் !
- அத்வானியால் எஸ்கேப் ஆன மோடி: வாஜ்பாய் ப்ளானே வேறு... யஷ்வந்த் சின்கா அதிரடி பேட்டி!
- பொன்பரப்பி கலவரம் : பாமக வழக்கறிஞர் திமுக மீது குற்றச்சாட்டு
- பொன்னமராவதியில் 144 வாபஸ் – இயல்புநிலைக்கு திரும்பிய புதுக்கோட்டை !
சிறைச்சாலையில் அடிதடி : கைதிகள் பலர் கொலை - திடுக்கிடும் சம்பவம்
தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் பலர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள பிரலமான சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் துஷான்பேவுக்கு அருகில் உள்ளது வாக்டட் சிறை. அங்கு 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்தக் கைதிகளில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினரும் உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆயினும் ஞாயிற்றுக் கிழமை அன்று 3 காவலர்கள் மற்றும் ஐந்து கைதிகளை ஐ எஸ் தீவிரவாதிகள் கொலை செய்ததால் அங்கு கலவரம் ஏற்பட்டது.
இதனையடுத்து சிறைப் பாதுகாவலர்கள் அங்கு கலவரத்தை அடக்க முயன்றனர். ஆனால் கட்டுக்கு மீறிய மோதலால் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 24 கைதிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தற்பொழுது விசாரணை நடைபெற்றுவருதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
