திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 20 மே 2019 (15:38 IST)

ஆஃபர் கொடுக்க சொன்னா... ஆப்பு அடிக்க ப்ளான் பண்ணும் வோடபோன்!

ஆஃபர் கொடுக்க சொன்னா... ஆப்பு அடிக்க ப்ளான் பண்ணும் வோடபோன்!
வோடபோன் மற்றும் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. 
 
ஐடியா நிறுவனம் சிட்டி பேங்கு உடன் இணைந்து வருடம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவையை வழங்கியது. தற்போது இது வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது.
 
ஜூலை 31, 2019 வரை வழங்கப்படும் இந்த சலுகையின்படி வாடிககையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆஃபர் கொடுக்க சொன்னா... ஆப்பு அடிக்க ப்ளான் பண்ணும் வோடபோன்!
இந்த சலுகையை பெற... 
வாடிக்கையாளர்கள் வோடபோன் பிரீபெயிட் சேவையை பயன்படுத்த வேண்டும். 
 
பின்னர் வோடபோனின் சலுகைகள் இடம்பெற்றிருக்கும் வலைதளம் சென்று புதிதாக கிரெடிட் கார்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். 
 
கிரெடிட் கார்டு வாங்கியதும், 30 நாட்களுக்குள் குறைந்தபட்சம் ரூ.4000 பயன்படுத்த வேண்டும். 
 
இவ்வாறு செய்யும் போது தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் இலவசமாக வழங்கப்படும்.
 
சென்னை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பூனே, ஆமதாபாத், செக்கந்தராபாத், பரோடா, ஜெய்பூர், டெல்லி, நொய்டா, குர்கிராம், மும்பை மற்றும் சண்டிகர் என தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.