1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (15:07 IST)

ஸ்னாப்சேட் டவுன்லோட்; இளம்பெண்ணை பெல்ட்டால் அடித்து, மொட்டை போட்ட தந்தை: வீடியோ இணைப்பு!!

அமெரிக்காவின் லூசியானா பகுதியில், இளம்பெண் ஒருவர் தனது மொபைல் போனில் ஸ்னாப்சேட் செயலியை பதிவிறக்கம் செய்ததால் அவளது தந்தை அவளை அடித்து துன்புறித்து மொட்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அலெக்ஸ் ஹாரிஸ்ன் என்பவர் தனது மகள் ஸ்னாப்சேட் செயலியை பதிவிறக்கம் செய்ததால் ஆத்திரம் அடைந்து பெல்ட்டால் கொடூரமாக தாக்கியுள்ளார். பின்னர், மகளுக்கு மொட்டை அடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் கசிந்தது. 
 
வீடியோ இணையத்தில் கசிந்ததால், இது போலீஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து போலீஸார் தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

நன்றி: LiveLeak