வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (20:23 IST)

ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு : நீதிபதியை தரையில் இழுந்து சென்ற காவலர்கள்...வைரல் வீடியோ

சகோதரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி ஒருதலைப் பட்சமாக நடந்துகொண்ட நீதிபதியை போலிஸார் தரதரவென தரையில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த பெண் நீதிபதி ஒருவர். தன் சொந்த சகோதரனுக்கு எதிரான ஒரு வழக்கை அண்மையில் விசாரித்துவந்தார்.
 
இந்நிலையில் சகோதரர் மீதுதான் முழுமையான தவறு உள்ளது என்று முழுமையாகத் தெரிந்திருந்தும் கூட அவர் தீர்ப்பு எழுதும் போது தன் சகோதரனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருதலைப்பட்சமாக எழுதினார். எனவே நீதியிலிருந்து பெண் நீதிபதி தவறியதால், நீதிமன்றத்தில் இருந்த காவலர்கள் அவரைக் குற்றவாளியாகக் கருதி உட்கார்த்திருந்த அவரை காவலர்கள் தரதரவென இழுந்துச் சென்றனர்.
இதுகுறித்து வீடியோ தற்போது சமுகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.