நடிகர் சங்க தேர்தல் விவகாரம்: ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு தொடுத்ததால் பரபரப்பு

Last Modified செவ்வாய், 25 ஜூன் 2019 (21:51 IST)
நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கில் தீர்ப்பில் தலையிட முயன்றதாக நடிகரும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவருமான ஐசரி கணேஷ் மீது ஒரு நீதிபதி தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நடிகர் சங்க தேர்தலை நடத்த பதிவாளர் தடையிட்டபோது இந்த தடையை எதிர்த்து விஷால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பின்போது தன்னை அனந்தராமன் என்பவர் மூலம் ஐசரி கணேஷ் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், தீர்ப்பை ஒத்தி வைக்க கேட்டுக்கொண்டதாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்துள்ளார்.

ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகிய இருவர் மீது நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்துள்ளதை அடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமனுக்கு, நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து சங்கரதாஸ் அணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :