வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (07:26 IST)

முகிலனுக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் போன நிலையில் நேற்று அவர் திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் பின்னர் அவரை பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்தனர். 
 
இதனையடுத்து அவரை ராயபுத்தில் உள்ள எழும்பூர் குற்றவியல் பெருநகர இரண்டாவது நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் வீட்டில், நள்ளிரவு ஒரு மணியளவில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது தமக்கு நெஞ்சு வலி இருப்பதாக முகிலன் கூறியதை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இன்று காலை 10 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் அவர் தனது உத்தரவில் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் நீதிபதியின் உத்தரவின்படி முகிலன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் நேற்றைய விசாரணையில் கடந்த 140 நாட்களாக எங்கு இருந்தார் என்ற கேள்விக்கு முகிலன் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது