புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2019 (07:50 IST)

வைகோ மீதான வழக்கில் இன்று தீர்ப்பு: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சிக்கல் வருமா?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் இன்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருக்கின்றது. ராஜயசபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள வைகோவுக்கு இந்த தீர்ப்பு சிக்கலை தருமா? என்பதை இன்னும் சிலமணி நேரங்களில் தெரிந்து கொள்ளலாம்
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது, விடுதலைபுலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது தேசத்துரோக வழக்கு ஒன்று சென்னை ஆயிரம்விளக்கு  காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கு பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி.எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்ட பின்னர் வழக்கின் விசாரணை சூடிபிடித்தது. இருதரப்பு வாதங்கள் உள்பட அனைத்து விசாரணை பணிகளும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. 
 
இந்த வழக்கின் தீர்ப்பில் வைகோவுக்கு ஒருவேளை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என சட்டநிபுணர்கள் கூறி வருகின்றனர்.