திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 அக்டோபர் 2021 (08:41 IST)

ஃபேஸ்புக் பெயர் மாற்றம்: மார்க் ஸக்கர்பர்க் அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஃபேஸ்புக் பெயர் மாற்றம்: மார்க் ஸக்கர்பர்க் அதிகாரபூர்வ அறிவிப்பு!
உலகின் நம்பர் 1 சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளி வந்தது என்பதும் பேஸ்புக்கின் புதிய பெயர் என்னவாக இருக்கும் என்பது குறித்த ஆய்வுகளில் பேஸ்புக் நிர்வாகிகள் நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் என்பவர் பேஸ்புக்கின் புதிய பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஃபேஸ்புக் புதிய பெயர் ‘மெட்டா’ என அழைக்கப்படும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் மக்கள் மனதில் பதியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
ஃபேஸ்புக் என்பது உலக அளவில் புகழ்பெற்ற பெயராக இருந்தது என்பதும் அதே போல் தமிழிலும் முகநூல் என்று தமிழகம் முழுவதும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் ’மெட்டா’ என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இதற்கு இணையான தமிழ்ப் பெயர் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்