திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 அக்டோபர் 2021 (20:15 IST)

சேவை முடங்கியது ஏன்? வாட்ஸ்-அப் விளக்கம்!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் நேற்று பேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் திடீரென முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதனால் அதன் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பல பயனர்கள் வாட்ஸ்அப் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என்பதை அறிந்துகொண்டோம் 
 
விரைவில் மீண்டும் பழைய நிலையை கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகின்றன உங்கள் பொறுமைக்கு நன்றி. தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆய்வு சேவைகள் முடங்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது