1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 5 மே 2021 (10:02 IST)

ஐந்தே நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 3D பிரிண்ட் வீடு: மாதம் ரூ.72 ஆயிரம் வாடகை

3D print
கடந்த சில வருடங்களாக உலகின் பல பகுதிகளில் 3D பிரிண்ட் வீடு கட்ட முயற்சித்து வரும் நிலையில் ஐரோப்பாவில் முதல் முறையாக 3D பிரிண்ட் வீடு கட்டப்பட்டுள்ளது 
 
ஐரோப்பா கண்டத்திலுள்ள நெதர்லாந்து நாட்டின் நிந்தோவன் என்ற பகுதியில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டை கட்டுவதற்கு வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே தேவையானது என்றும் ஐந்தே நாட்களில் பொறியியல் வல்லுனர்கள் இந்த வீட்டை கட்டி முடித்தார்கள் என்றும் தகவல் வெளிவந்துள்ளது 
 
அதுமட்டுமின்றி இந்த வீட்டை வேறு எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் மிக எளிதில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதற்கேற்ற வசதிகள் இந்த வீட்டின் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது ஐரோப்பாவின் முதல் 3D பிரிண்ட் வீட்டில் வயதான தம்பதியினர் தற்போது வாடகைக்கு சென்றுள்ளனர். இந்த வீட்டின் மாத வாடகை ரூபாய் 72 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடு குறித்த தகவல்கள் தற்போது உலகம் முழுவதும் அதிகமாக பரவி வருகிறது